திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், செம்மங்குடி கிராமத்தில் அமைந்து இருக்கும் ஸ்ரீ. ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலின் சிறப்புகள்:
ஸ்வாமி பெயர் : ஸ்ரீ. ஆஸ்தீஸ்வரர்
அம்பாள் பெயர் : ஸ்ரீ. ஆனந்தவல்லி
சிறப்பு:
ஸ்ரீ வித்யா பீடம், ஸ்ரீ மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் ஸ்ரீ சக்ரா பிரதிஷ்டை ஆகும்.
ஸ்ரீ அகஸ்தியர் பூஜை செய்ததால் ஸ்ரீ ஸ்வாமி பெயர் ஸ்ரீ ஆஸ்தீஸ்வரர் என்பது ஆகும்.
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீல சந்திரசேகர ஸ்வாமிகள் இவ்வூரில் 3 மாதம் தங்கி தினசரி அம்பாளை தரிசனம் செய்த பெருமை உடையது.
இவ்வாலயத்தில் பௌர்ணமி தோறும் மாலை07.00 மணி முதல் 11.00 மணி வரை மிக சிறந்த ஸ்ரீ நவாவரண பூஜை பரசுராம கல்பத்தின் நெறிப்படி நடை பெறுகிறது.
இப்பூஜையில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், உத்யோக உயர்வு, தொழில் அபிவிருத்தி, அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் சுவாசினி சாபம், பிதுர் சாபம், ப்ரஹ்மஹத்தி தோஷம், ஜாதகத்தினால் ஏற்படும் தோஷங்கள் கண்டிப்பாக நிவர்த்தி அடையும். அனைவரும் பௌர்ணமி ஸ்ரீ நவாவரண பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ அனந்தவல்லியின் பேரருளை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
உற்சவம்: மாசி மதம் உத்திரம் மற்றும் ஹஸ்தம் நக்ஷத்திரங்களில் கோவிலில் ப்ரஹ்மோத்சவம் நடைபெறும். உற்சவ சிறப்பு: ஸ்ரீ வித்யா மந்திரத்தில் மிக உயர்வான ஸ்ரீ பஞ்சதசாக்ஷரி ஹோமம், ஸ்ரீ நவாவவர்ண பூஜை ஹோமம், திதிநிதிய பூஜை, ஸ்ரீ நவாவரண கீர்த்தனை, ஸ்ரீ மீனாட்சி கல்யாண உற்சவத்துடன் நிறைவடையும்.
தனித்தன்மை:
இக்கோவில் வளாகத்தில் ஒரே மேடையில் ஸ்ரீ சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ அபாய வராத ஹஸ்த ஆஞ்சநேயர் இருப்பதால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்ற உபாதையில் இருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்தால், அந்த உபாதையில் இருந்து விடுபடலாம். இது அனுபவ உண்மை.
ஸ்தல வ்ருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : அகஸ்திய புஷ்கரிணி
பாடியவர் : வைப்பு ஸ்தலங்களில் பாடல் பெற்ற சிவஸ்தலம் - அப்பர்
Comments