“ஹ்ருத் அம்புஜே கர்ணிக மத்ய ஸம்ஸ்தம்
ஸிம்ஹாஸனே ஸம்ஸ்தித திவ்யமூர்த்திம் !
த்யாயேத்குரும் சந்த்ர கலாப்ரகாஶம்
ஸச்சித் சுகாபீஷ்டவரம் ததானம்!!”
நமது ஹ்ருதய மத்தியில் ஸம்ஹாஸனத்தில் அமர்ந்து திவ்யமாக சந்த்ரகலையுடன் கூடிய புன்னகை தவழும் முகத்துடன் நமக்கு சுகத்தை அளித்து வேண்டிய வரங்களை அளிப்பவராகவும் விளங்கும் நம் ப்ராணநாதனான ஸத்குருநாதரை த்யானிக்கிறேன்” என்ற பாவனையுடன் ஸத்குருவை த்யானிக்க வேண்டும்.
எண்ணம்போல் வாழ்க்கை ஆகையால் உயர்ந்த சிந்தனையுடன் எப்பொழுதும் நமக்காகவும் நமது நலத்தை மட்டுமே எண்ணி நமக்கு அனுக்ரஹம் செய்யும் கருணைக்கடலாக ஜ்வலிக்கும் நமது ஸத்குருநாதரின் சரணகமலங்களை ஸ்வாஸமாகக்கொண்டு த்யானிக்க வேண்டும் .
அவ்வாறு த்யானிக்கும் பொழுது நமக்கு தகுதியில்லாத விஷயம் கூட ஸத்குருவின் அருட் ப்ரவாஹத்தால் நமக்கு கிடைக்கும். குருவருளாலேயே தேவியருள் சித்திக்கும். தேவியருள் சித்திக்க ஸத்குருவின் சரணகமலங்களைத்தவிர வேறு கதியில்லை.
ஆகையால், எப்பொழுதும் ஸத்குருநாதரை த்யானித்து பயணிப்போம் ஸர்வவ்யாபியாக விளங்கும் ஸத்குருநாதரின் அனுக்ரஹத்தை வேண்டியபடியே !!
ஜெய் ஸத்குரு மஹாராஜ் கீ ஜெய் !!!
ஸ்ரீ ஆனந்தவல்லி பாஹிமாம் !!! ஸ்ரீ ஆனந்தவல்லி ரக்ஷமாம்!!!
Kommentare