“அழலின் நீங்கான் அனுகான் அஞ்சி”
என்னும் நன்னூல் சூத்திரம், அனலை அடைந்த பொன் மாசு நீங்கி ஒளி வீசுதல்போல, குருவை சரணாகதி அடையும் சிஷ்யன் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் ஒளி மிகப் பெறுபவராவர் என்று கூறுகிறது.
பொறுமையும் ,குருபக்தியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் மற்றும் சரணாகதி மனப்பான்மையுடன் குருசேவையில் முழுமையாக ஈடுபட்ட ஒரு சிஷ்யனுக்கு குரு தாமே முன்வந்து “தீக்ஷை” அளிக்கிறார்.
ஸ்மரண தீக்ஷை :: குரு மனதில் நினைப்பதாலேயே சீடனை ஞானியாக்கும் வல்லமை பெற்றவர்.
நயந தீக்ஷை :: குரு சீடனை தனது பார்வையின் மூலம் உய்விக்கும் முறை
“நயந தீக்ஷை".
சப்த தீக்ஷை :: குருவின் வாக்கால் ஞானம் பெறுவது “சப்த தீக்ஷை".
ஸ்பர்ச தீக்ஷை :: குரு தொடுவதால் சீடனை உய்விக்கும்முறை “ஸ்பர்ச தீக்ஷை”.
குருவே எல்லா மனிதர்களிலும் உள்ள கொடையாளிகளில், ஆகச் சிறந்தவர். இறைவனைப் போலவே அவருடைய பெருந்தன்மைக்கு எல்லையே இல்லை.
நம்மை அறியாமலேயே நம்முடைய அறியாமையை போக்கும் தன்மை குருவுக்கு உண்டு.
“ குருவை சிந்திப்போம்” “குருவருள் பெறுவோம்”
Comentários