தாரித்ரியத்தால் கஷ்டப்படும் ஜனங்கள் தேவியினுடைய பாதாரவிந்தத்தால் நமஸ்காரம் செய்த மாத்ரத்தில், அந்த தரித்ரர்களுடைய இச்சையை அனுசரித்தும், அதற்கு மேலாகவும் ஸம்பத்தைக் கொடுக்கும் சக்தியுள்ளதே தேவியினுடைய பாதாரவிந்தமாகும்.
அந்த பாதாரவிந்தங்கள், சௌந்தர்யமாகிய அம்ருதப் பெருக்கையும் ப்ரவாஹிக்கச் செய்கின்றது.
தேவலோகத்திலுள்ள கல்பவ்ருக்ஷங்களின் புஷ்பக் கொத்துகளைக்போல் மிகவும் அழகாகவும் தேவியினுடைய சரணங்கள் விளங்கிவருகின்றன. புஷ்பங்களில் ஆறுகால் வண்டுகள், உள்பாகத்தில் நுழைந்து ரஸத்தை அபஹரிப்பதுபோல், தேவியினுடைய சரணங்களும் சௌந்தர்யம் என்ற ரஸத்தால் நிரப்பப்பட்ட புஷ்ப விசேஷமாக பாஸிக்கின்றபடியால், அந்த சரணங்களில் ஆசார்யாள் தான் ஆறு கால் வண்டுபோல் ப்ரவேசித்து, மோக்ஷத்திற்கு அந்தரங்க ஸாதனமான ரஸத்தை அனுபவிக்க தேவியினிடம் ப்ரார்த்திக்கின்றார்கள்.
மனதினால் தேவியினுடைய பாதாரவிந்த த்யானத்தையும் அனுபவித்துக்கொண்டு, ஜன்ம ஸாபல்யத்தை அடையவேண்டுமென்று சொல்லப்படுகிறது.
வெளியிலுள்ள ஐந்து ஞானேந்த்ரியங்களுக்கும், மனது என்ற அந்தக்கரணத்திற்கும் தேவியினுடைய பாதாரவிந்தங்களில் ஏற்படும் ஸஞ்சாரமே முக்திக்கு அந்தரங்க ஸாதனமாகும். தேவியினுடைய சரணங்களில் தனது இந்த்ரியங்களை லயப்படுத்தி மனதினால் தேவியை த்யானம் செய்கிறவர்கள் தாரித்ரியாவஸ்தையிலிருந்தும் விமுக்தர்களாக ஆகி குபேரனுக்கு ஸமமாக ஆவார்கள்.
Comments